• Dec 23 2024

திருமலையில் தொடரும் காட்டு யானையின் அட்டகாசம்-வீடு பலத்த சேதம்; மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்..!

Sharmi / Dec 23rd 2024, 8:34 am
image

கிண்ணியாவில் மக்களின் குடியிருப்புக்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் நேற்றையதினம்(22)  இரவு 11 மணியளவில் நுழைந்த காட்டு யானை மேற்கொண்ட தாக்குதலில் வீடொன்று பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கிறார். 

இரவு நேரத்தில் தனது பிள்ளையுடன் தூங்கி கொண்டிருக்கும் போது குறித்த யானை தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவித்தார். 

இதனால் வீடு மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டு தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். 

குறித்த பகுதியில் அடிக்கடி யானை தொல்லை ஏற்படுவதனால் அப் பிரதேச மக்கள் நிம்மதியாக தூங்க முடியாது தவிர்க்கின்றனர். 

இந்நிலையில், பாதுகாப்பான யானை வேலி இன்மையால் யானை தொல்லையில் இருந்து பாதுகாக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


 


திருமலையில் தொடரும் காட்டு யானையின் அட்டகாசம்-வீடு பலத்த சேதம்; மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம். கிண்ணியாவில் மக்களின் குடியிருப்புக்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் நேற்றையதினம்(22)  இரவு 11 மணியளவில் நுழைந்த காட்டு யானை மேற்கொண்ட தாக்குதலில் வீடொன்று பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கிறார். இரவு நேரத்தில் தனது பிள்ளையுடன் தூங்கி கொண்டிருக்கும் போது குறித்த யானை தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவித்தார். இதனால் வீடு மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டு தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். குறித்த பகுதியில் அடிக்கடி யானை தொல்லை ஏற்படுவதனால் அப் பிரதேச மக்கள் நிம்மதியாக தூங்க முடியாது தவிர்க்கின்றனர். இந்நிலையில், பாதுகாப்பான யானை வேலி இன்மையால் யானை தொல்லையில் இருந்து பாதுகாக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement