• Apr 02 2025

சிவனொளிபாத மலை பருவகாலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்!

Chithra / Dec 15th 2024, 4:22 pm
image


சிவனொளிபாத மலை பருவகாலம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாத்திரிகர்களின் வசதிக்காக மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் வரை வழமையாக இடம்பெறும் பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக வார இறுதி நாட்களில் நல்லதண்ணிய வரை மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகிலிருந்து நல்லதண்ணி வரையிலும், விசேட பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சிவனொளிபாத மலை பருவகாலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் சிவனொளிபாத மலை பருவகாலம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாத்திரிகர்களின் வசதிக்காக மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் வரை வழமையாக இடம்பெறும் பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக வார இறுதி நாட்களில் நல்லதண்ணிய வரை மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகிலிருந்து நல்லதண்ணி வரையிலும், விசேட பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement