பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, புதிய சட்டமூலமானது உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தித்தை மீறாத வகையில் இந்த சட்டமூலம் அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு முந்தைய அரசாங்கங்கள் உரிய ஆர்வத்துடன் செயல்படவில்லை எனவும், இதற்காக தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழு மிகக்குறுகிய காலத்திற்குள் இந்தச் சட்டத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மே மாதத்தின் ஆரம்பத்தில் பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கருத்துகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது தொடர்பில் ஆராய விசேட குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி, புதிய சட்டமூலமானது உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தித்தை மீறாத வகையில் இந்த சட்டமூலம் அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு முந்தைய அரசாங்கங்கள் உரிய ஆர்வத்துடன் செயல்படவில்லை எனவும், இதற்காக தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழு மிகக்குறுகிய காலத்திற்குள் இந்தச் சட்டத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, எதிர்வரும் மே மாதத்தின் ஆரம்பத்தில் பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கருத்துகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.