• Apr 15 2025

இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு புத்தாண்டு உந்துதலாக அமையும் - கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு

Thansita / Apr 13th 2025, 10:00 pm
image

இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் நிலையானதொரு அமைதியை ஏற்படுத்துவதற்கு நாம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்த தமிழ், சிங்கள புத்தாண்டும் ஒரு உந்துதலாக அமையும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

'மலரவிருக்கும் விசுவாசுவ வருடமானது, எல்லா மக்களுக்கும் அன்பையும் , நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த சந்தோஷத்தையும், பல்வேறு வெற்றிகளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும். 

இயற்கைமீது மட்டும் பொறுப்பை வழங்காது, அந்த இலக்குகளை மக்கள் அடைவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் உரிய களத்தை அமைத்துக்கொடுப்போம்.

ஒரு நாடாக நாம் மீண்டெழுந்தால் நிச்சயம் மேற்கண்டவாறு நாம் வேண்டும் பிரார்த்தனை ஈடேறும். எனவே, இலங்கையர்களாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு நாம் ஒன்றாக முன்னோக்கி செல்ல வேண்டும்.

இனவாதம், மதவாதம், குலபேதம் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது. அதனை இந்த தலைமுறையுடனேயே இல்லாதொழித்துவிட வேண்டும். எமது நாடு இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு இவைகூட பிரதான காரணங்களாகும். அவற்றை நாம் நிச்சயம் மாற்றியமைப்போம்.  

எனவே, மக்களின் கனவை நனவாக்குவதற்கு புத்தாண்டில் மேலும் மேலும் துணிச்சலுடன், நல்லெண்ணம் கொண்டு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என உறுதியளிக்கின்றேன்  என்றார்.

இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு புத்தாண்டு உந்துதலாக அமையும் - கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் நிலையானதொரு அமைதியை ஏற்படுத்துவதற்கு நாம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்த தமிழ், சிங்கள புத்தாண்டும் ஒரு உந்துதலாக அமையும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,'மலரவிருக்கும் விசுவாசுவ வருடமானது, எல்லா மக்களுக்கும் அன்பையும் , நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த சந்தோஷத்தையும், பல்வேறு வெற்றிகளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும்.  இயற்கைமீது மட்டும் பொறுப்பை வழங்காது, அந்த இலக்குகளை மக்கள் அடைவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் உரிய களத்தை அமைத்துக்கொடுப்போம்.ஒரு நாடாக நாம் மீண்டெழுந்தால் நிச்சயம் மேற்கண்டவாறு நாம் வேண்டும் பிரார்த்தனை ஈடேறும். எனவே, இலங்கையர்களாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு நாம் ஒன்றாக முன்னோக்கி செல்ல வேண்டும்.இனவாதம், மதவாதம், குலபேதம் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது. அதனை இந்த தலைமுறையுடனேயே இல்லாதொழித்துவிட வேண்டும். எமது நாடு இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு இவைகூட பிரதான காரணங்களாகும். அவற்றை நாம் நிச்சயம் மாற்றியமைப்போம்.  எனவே, மக்களின் கனவை நனவாக்குவதற்கு புத்தாண்டில் மேலும் மேலும் துணிச்சலுடன், நல்லெண்ணம் கொண்டு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என உறுதியளிக்கின்றேன்  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement