நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36,552 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம். நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை, இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36,552 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.