• Sep 20 2024

முல்லைத்தீவில் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் samugammedia

Chithra / Aug 16th 2023, 11:35 am
image

Advertisement

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம், மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் பூர்வீக காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவும் அதற்கான தீர்வுகளை எட்டும் முகமாகவும் இன்று (16) காலை 9.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தினுடைய பிரதிநிதி இளங்கோவன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், வனவளத்திணைக்களம், மகாவலி அதிகார சபை உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களது தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


முல்லைத்தீவில் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் samugammedia  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம், மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் பூர்வீக காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவும் அதற்கான தீர்வுகளை எட்டும் முகமாகவும் இன்று (16) காலை 9.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தினுடைய பிரதிநிதி இளங்கோவன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், வனவளத்திணைக்களம், மகாவலி அதிகார சபை உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களது தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement