• May 21 2024

சென்னை விமான நிலையத்துக்குள் பரபரப்பை ஏற்பட்டுத்திய யாழ். இளைஞன்! நடந்தது என்ன? samugammedia

Chithra / Aug 16th 2023, 11:28 am
image

Advertisement

 விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. 

திங்கட்கிழமை (14) இரவு இளைஞர் ஒருவர் விமானடிக்கெட், சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும்க வுன்ட்டர் பகுதி வரை சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.

இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞரைப் பிடித்து அடித்த அதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் எந்த ஆவணமும் இல்லாமல் விமான நிலையத்துக்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 




சென்னை விமான நிலையத்துக்குள் பரபரப்பை ஏற்பட்டுத்திய யாழ். இளைஞன் நடந்தது என்ன samugammedia  விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. திங்கட்கிழமை (14) இரவு இளைஞர் ஒருவர் விமானடிக்கெட், சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும்க வுன்ட்டர் பகுதி வரை சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார்.இதையடுத்து, அந்த இளைஞரைப் பிடித்து அடித்த அதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் எந்த ஆவணமும் இல்லாமல் விமான நிலையத்துக்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement