• Apr 11 2025

பனாமா எண்ணெய் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்..!!

Tamil nila / May 20th 2024, 9:52 pm
image

செங்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

உந்துகணைத் தாக்குதலால் கப்பலில் சிறு சேதங்கள் ஏற்பட்டன. சில அறைகளில் கடல் நீர் புகுந்தது. இருப்பினும் மாலுமிகள் விரைவாக செயல்பட்டு கப்பலை வழக்க நிலைக்கு கொண்டுவந்து கடலில் செலுத்தியதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை.

கப்பல் தாக்கப்பட்ட போது சுற்றுக்காவலில் அமெரிக்க ராணுவக் கப்பல் இருந்ததாகவும் தாக்கப்பட்ட கப்பலுக்குத் தேவையான உதவிகளை செய்யத் தயார் நிலையில் இருந்ததாகவும் வா‌ஷிங்டன் கூறியது.

ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சி படைக்கு ஈரான் நாட்டின் ஆதரவு உள்ளது. இஸ்ரேல் காஸா மீது நடத்தி வரும் போரைக் கண்டித்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில மாதங்களாக செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாப் பகுதிகளில் செல்லும் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

இதனால் அந்தக் கடல் பகுதிகளில் செல்லும் கப்பல்கள் சிரமத்திற்குள்ளாகின்றன.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

பனாமா எண்ணெய் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல். செங்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.உந்துகணைத் தாக்குதலால் கப்பலில் சிறு சேதங்கள் ஏற்பட்டன. சில அறைகளில் கடல் நீர் புகுந்தது. இருப்பினும் மாலுமிகள் விரைவாக செயல்பட்டு கப்பலை வழக்க நிலைக்கு கொண்டுவந்து கடலில் செலுத்தியதாக அமெரிக்க ராணுவம் கூறியது.தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை.கப்பல் தாக்கப்பட்ட போது சுற்றுக்காவலில் அமெரிக்க ராணுவக் கப்பல் இருந்ததாகவும் தாக்கப்பட்ட கப்பலுக்குத் தேவையான உதவிகளை செய்யத் தயார் நிலையில் இருந்ததாகவும் வா‌ஷிங்டன் கூறியது.ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சி படைக்கு ஈரான் நாட்டின் ஆதரவு உள்ளது. இஸ்ரேல் காஸா மீது நடத்தி வரும் போரைக் கண்டித்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில மாதங்களாக செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாப் பகுதிகளில் செல்லும் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.இதனால் அந்தக் கடல் பகுதிகளில் செல்லும் கப்பல்கள் சிரமத்திற்குள்ளாகின்றன.ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement