மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்த விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்வது குறித்துப் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகள் அல்லது முறையற்ற விநியோகத்தால் மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரங்களான விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்தல். எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற நெரிசல்களைத் தவிர்க்கவும், முறையான முகாமைத்துவத்தை மேற்கொள்ளவும் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கமநல அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து, உண்மையான பயனாளிகளுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.
இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் விலையேற்றம் அல்லது விநியோகச் சங்கிலி பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்து, மாவட்ட மட்டத்தில் இவ்வாறான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் எரிபொருளை சீரான முறையில் விநியோகிப்பது குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்த விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்வது குறித்துப் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகள் அல்லது முறையற்ற விநியோகத்தால் மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரங்களான விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்தல். எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற நெரிசல்களைத் தவிர்க்கவும், முறையான முகாமைத்துவத்தை மேற்கொள்ளவும் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கமநல அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து, உண்மையான பயனாளிகளுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் விலையேற்றம் அல்லது விநியோகச் சங்கிலி பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்து, மாவட்ட மட்டத்தில் இவ்வாறான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.