• Apr 14 2026

யாழ்ப்பாணத்தில் இன்று 36 நிலையங்களில் பெற்றோல் விநியோகம்

Chithra / Mar 5th 2026, 7:58 am
image

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விநியோகம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாவட்டத்திலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 36 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோலும், 19 நிலையங்களில் மண்ணெண்ணெயும் விநியோகிக்கப்படவுள்ளன.

இன்று  பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ள 36 நிலையங்களில் சில முக்கிய இடங்கள் வருமாறு:

பரமேஸ்வரா சந்தி

மருதனார்மடம்

பண்டத்தரிப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கம் (MPCS)

கல்வியங்காடு

சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கம்

மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கம்

யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவு சங்கம்

தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்கம் பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.

மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகருதி, மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட  19 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நாளை மண்ணெண்ணெய் விநியோகமும் இடம்பெறவுள்ளது.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், மாவட்ட செயலகத்தின் இந்த முறையான அறிவிப்பு மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. 

பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்கும் போது அமைதியைப் பேணுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் இன்று 36 நிலையங்களில் பெற்றோல் விநியோகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விநியோகம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ளது.இதன்படி, மாவட்டத்திலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 36 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோலும், 19 நிலையங்களில் மண்ணெண்ணெயும் விநியோகிக்கப்படவுள்ளன.இன்று  பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ள 36 நிலையங்களில் சில முக்கிய இடங்கள் வருமாறு:பரமேஸ்வரா சந்திமருதனார்மடம்பண்டத்தரிப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கம் (MPCS)கல்வியங்காடுசாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கம்மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கம்யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவு சங்கம்தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்கம் பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகருதி, மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட  19 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நாளை மண்ணெண்ணெய் விநியோகமும் இடம்பெறவுள்ளது.மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், மாவட்ட செயலகத்தின் இந்த முறையான அறிவிப்பு மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்கும் போது அமைதியைப் பேணுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement