• Nov 22 2024

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பு! எடுக்கப்பட்ட நடவடிக்கை

Chithra / Aug 18th 2024, 8:49 am
image

 

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், மதிப்பீட்டின் பின்னர் பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இந்த குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய, வேட்பாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், அச்சுறுத்தலுக்கு உள்ளான வேட்பாளர்களின் வீடுகளுக்கும், அவர்கள் நடமாடும் போது அவர்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பு எடுக்கப்பட்ட நடவடிக்கை  உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், மதிப்பீட்டின் பின்னர் பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.இந்த குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய, வேட்பாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்மூலம், அச்சுறுத்தலுக்கு உள்ளான வேட்பாளர்களின் வீடுகளுக்கும், அவர்கள் நடமாடும் போது அவர்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement