• Jul 16 2026

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த 11 மாவட்டங்களில் இன்று முதல் விசேட ஒழிப்புத் திட்டம்

dorin / Jul 16th 2026, 11:03 am
image

தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். 

டெங்கு பரவல் அதிகமாகப் பதிவாகும் வலயங்களை இனங்கண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த 11 மாவட்டங்களில் இன்று முதல் விசேட ஒழிப்புத் திட்டம் தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். டெங்கு பரவல் அதிகமாகப் பதிவாகும் வலயங்களை இனங்கண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்

Advertisement

Advertisement

Advertisement