• Nov 26 2024

உயர்தர பரீட்சைக்காக விசேட பரீட்சை நிலையம் -வெளியான அறிவிப்பு..!samugammedia

mathuri / Jan 3rd 2024, 10:58 am
image

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக பொலன்னறுவை, வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்விப் பிரிவுகளில் வசிக்கும்  பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் இந்த விசேட பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட பரீட்சை நிலையத்தில் ஆணையாளர் வழங்கிய பரீட்சை அனுமதி அட்டை செல்லுபடியாகும் என்றும் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ,பரீட்சைக்கு செல்ல தடை இல்லாத பரீட்சார்த்திகள் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட அதே பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



உயர்தர பரீட்சைக்காக விசேட பரீட்சை நிலையம் -வெளியான அறிவிப்பு.samugammedia நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக பொலன்னறுவை, வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்விப் பிரிவுகளில் வசிக்கும்  பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் இந்த விசேட பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட பரீட்சை நிலையத்தில் ஆணையாளர் வழங்கிய பரீட்சை அனுமதி அட்டை செல்லுபடியாகும் என்றும் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை ,பரீட்சைக்கு செல்ல தடை இல்லாத பரீட்சார்த்திகள் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட அதே பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement