• Sep 21 2024

உள்ளுராட்சி மன்றங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பிலான விசேட அறிவித்தல் samugammedia

Chithra / Oct 26th 2023, 10:30 am
image

Advertisement

 

அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல உள்ளூராட்சி மன்றங்கள் இது தொடர்பான வேலைத்திட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் வரி அறவீடு நடவடிக்கைகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இயங்கும் 341 உள்ளூராட்சி நிறுவனங்களிலும் உரிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அனைத்து வீதிகளையும் இவ்வருட இறுதிக்குள் வரைபடமாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனக வக்கும்புர தெரிவித்தார்.


உள்ளுராட்சி மன்றங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பிலான விசேட அறிவித்தல் samugammedia  அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.பல உள்ளூராட்சி மன்றங்கள் இது தொடர்பான வேலைத்திட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் வரி அறவீடு நடவடிக்கைகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இயங்கும் 341 உள்ளூராட்சி நிறுவனங்களிலும் உரிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அனைத்து வீதிகளையும் இவ்வருட இறுதிக்குள் வரைபடமாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement