பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நாளையும் அதன் பின்னரும் இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு பிரிவு ஒன்று இன்று (13) நிறுவப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் விசேட யோசனையின் பிரகாரம் இந்த விசேட பிரிவு இயங்கவுள்ளது.
இலங்கை பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை, முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் இணைக்கப்பட்டு இந்த விசேட செயற்பாட்டு பிரிவு இயங்கவுள்ளது.
நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் விசேட செயற்பாட்டு பிரிவொன்று இயங்குவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த பிரிவு தொடர்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ, மேல் மாகாணம் ட்ரோன் கெமெராக்களை பயன்படுத்தி விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தேவைக்கு ஏற்ப ஏனைய மாகாணங்களையும் ட்ரோன் கெமராக்கள் மூலம் சோதனை செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் நடந்தாலோ அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் இருந்தாலோ, அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த விசேட செயற்பாட்டு பிரிவின் மூலம் கண்காணிக்க முடியும்.
அதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களைப் பயன்படுத்தி 3,000க்கும் மேற்பட்ட நடமாடும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அவதானிப்புகளின் போது கிடைக்கும் தகவல்களுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதி பொலிஸ்மா அதிபர் முதல் பொறுப்பதிகாரிகள் வரை தமது தொலைபேசிகள் ஊடாக மாவட்டங்களில் கண்காணிக்க நடவடிக்கையில் ஈடுபட முடியும்.
சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரப்பப்படும் தேர்தல் தொடர்பான சட்டவிரோதமான விடயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்களை கண்காணிப்பது இந்த விசேட செயற்பாட்டு பிரிவின் மற்றுமொரு விசேட கடமையாகும்.
இதுதவிர தற்போது சிசிடிவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதால், கிடைத்த தகவல்களின் மூலம் வீதிகளின் பாதுகாப்பு நிலையையும் இந்த சிறப்பு செயற்பாட்டு பிரிவிலிருந்து இருந்து கண்காணிக்க முடியும்.
இராணுவ சிறப்புப் படைகள், விமானப்படை, புலனாய்வு சேவைகள் ஆகியவையும் இந்த நடவடிக்கைக்கு பங்களிக்கின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விசேட செயற்பாட்டு பிரிவு பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நாளையும் அதன் பின்னரும் இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு பிரிவு ஒன்று இன்று (13) நிறுவப்பட்டுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் விசேட யோசனையின் பிரகாரம் இந்த விசேட பிரிவு இயங்கவுள்ளது.இலங்கை பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை, முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் இணைக்கப்பட்டு இந்த விசேட செயற்பாட்டு பிரிவு இயங்கவுள்ளது.நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் விசேட செயற்பாட்டு பிரிவொன்று இயங்குவது இதுவே முதல் தடவையாகும்.இந்த பிரிவு தொடர்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ, மேல் மாகாணம் ட்ரோன் கெமெராக்களை பயன்படுத்தி விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.தேவைக்கு ஏற்ப ஏனைய மாகாணங்களையும் ட்ரோன் கெமராக்கள் மூலம் சோதனை செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் நடந்தாலோ அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் இருந்தாலோ, அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த விசேட செயற்பாட்டு பிரிவின் மூலம் கண்காணிக்க முடியும்.அதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களைப் பயன்படுத்தி 3,000க்கும் மேற்பட்ட நடமாடும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த அவதானிப்புகளின் போது கிடைக்கும் தகவல்களுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதி பொலிஸ்மா அதிபர் முதல் பொறுப்பதிகாரிகள் வரை தமது தொலைபேசிகள் ஊடாக மாவட்டங்களில் கண்காணிக்க நடவடிக்கையில் ஈடுபட முடியும்.சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரப்பப்படும் தேர்தல் தொடர்பான சட்டவிரோதமான விடயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்களை கண்காணிப்பது இந்த விசேட செயற்பாட்டு பிரிவின் மற்றுமொரு விசேட கடமையாகும்.இதுதவிர தற்போது சிசிடிவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதால், கிடைத்த தகவல்களின் மூலம் வீதிகளின் பாதுகாப்பு நிலையையும் இந்த சிறப்பு செயற்பாட்டு பிரிவிலிருந்து இருந்து கண்காணிக்க முடியும்.இராணுவ சிறப்புப் படைகள், விமானப்படை, புலனாய்வு சேவைகள் ஆகியவையும் இந்த நடவடிக்கைக்கு பங்களிக்கின்றன.