• Jan 11 2025

சிகிரியாவில் சிறப்புத் திட்டங்கள் - கொரியாவிடமிருந்து பில்லியன் கணக்கில் உதவி

Chithra / Dec 29th 2024, 1:45 pm
image

 

உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சிகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயற்படுத்தவும் கொரியா  சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

சிகிரியா பாறைக்கு செல்வதற்கான பாதை மேம்பாடு, மாற்று பாதை அமைத்தல், சிகிரியா அருங்காட்சியகம், உணவகம் மற்றும் பற்றுச்சீட்டு பெறும் இடம் உள்ளிட்ட பல திட்டங்கள் இதனுள் உள்ளடங்குகின்றது.

முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 2.4 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் மத்திய கலாசார நிதியத்திற்கும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 27ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிகிரியாவில் சிறப்புத் திட்டங்கள் - கொரியாவிடமிருந்து பில்லியன் கணக்கில் உதவி  உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சிகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயற்படுத்தவும் கொரியா  சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.சிகிரியா பாறைக்கு செல்வதற்கான பாதை மேம்பாடு, மாற்று பாதை அமைத்தல், சிகிரியா அருங்காட்சியகம், உணவகம் மற்றும் பற்றுச்சீட்டு பெறும் இடம் உள்ளிட்ட பல திட்டங்கள் இதனுள் உள்ளடங்குகின்றது.முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 2.4 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் மத்திய கலாசார நிதியத்திற்கும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் முன்மொழியப்பட்டுள்ளது.இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 27ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement