• Dec 20 2024

இலங்கை வரும் ஆய்வு கப்பல்களுக்கு விசேட விதிமுறைகள்; எட்காவுடன் எந்த இணக்கப்பாடு இல்லை! - அரசு அறிவிப்பு

Chithra / Dec 20th 2024, 11:41 am
image


இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அதானியின் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்னர் அதைப்பற்றி பேசலாம் என்று தெரிவித்த அமைச்சர், 13 ஆவது திருத்த அமுலாக்கம் என்பன இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டே நடக்குமென தெரிவித்தார்.

எட்கா ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் ஆழமாக பேசப்படவில்லையென்றும் அமைச்சர் கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் குறித்து அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு எட்டப்பட்டது என்றார்.

அதை விடுத்து இலங்கையில் எண்ணெய் குழாய் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக செய்திகளை உருவாக்குவது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நாட்டுக்கு வரும் ஆய்வு கப்பல்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு கப்பல்கள் நாட்டு எல்லைக்குள் வரும்போது அவை விசேட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த நடைமுறைகளுக்கான தேசிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கான விசேட தேசிய கொள்கைகளை தயாரிக்க விசேட குழுவோன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக   தெரிவித்தார். 

எதிர்வரும் நாட்களில் அந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அவர் குறிப்பிட்டார். 

கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் அந்த குழு கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். 

 

இலங்கை வரும் ஆய்வு கப்பல்களுக்கு விசேட விதிமுறைகள்; எட்காவுடன் எந்த இணக்கப்பாடு இல்லை - அரசு அறிவிப்பு இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.அதானியின் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்னர் அதைப்பற்றி பேசலாம் என்று தெரிவித்த அமைச்சர், 13 ஆவது திருத்த அமுலாக்கம் என்பன இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டே நடக்குமென தெரிவித்தார்.எட்கா ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் ஆழமாக பேசப்படவில்லையென்றும் அமைச்சர் கூறினார்.இந்தியா மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் குறித்து அமைச்சர் இங்கு தெரிவித்தார்.தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு எட்டப்பட்டது என்றார்.அதை விடுத்து இலங்கையில் எண்ணெய் குழாய் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக செய்திகளை உருவாக்குவது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் நாட்டுக்கு வரும் ஆய்வு கப்பல்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு கப்பல்கள் நாட்டு எல்லைக்குள் வரும்போது அவை விசேட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த நடைமுறைகளுக்கான தேசிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.அதற்கான விசேட தேசிய கொள்கைகளை தயாரிக்க விசேட குழுவோன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக   தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் அந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அவர் குறிப்பிட்டார். கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் அந்த குழு கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement