• Jan 11 2025

எதிர்வரும் விடுமுறைக்காக விசேட தொடருந்து சேவை ஆரம்பம்!

Chithra / Jan 7th 2025, 8:15 am
image

 

தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இந்த சிறப்பு ரயில் சேவை நடவடிக்கை இலங்கை ரயில் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட தொடருந்து சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதலாவது விசேட தொடருந்து, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும், இந்த தொடருந்து கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 07.40க்கு புறப்படும்.

இந்த தொடருந்து 2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31 மற்றும் பெப்ரவரி 02, 04 ஆகிய தினங்களில் இயங்கும்.

இரண்டாவது விசேட தொடருந்து, பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும், இந்த தொடருந்து பதுளையில் இருந்து இரவு 07.40க்கு புறப்படும்.

இந்த தொடருந்து 2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31, மற்றும் 2025 பெப்ரவரி 02, 04 ஆகிய தினங்களில் இயங்கும்.

இதை தவிர்த்து கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு இடையிலான விசேட தொடருந்து சேவையில், கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 05.30 மணிக்கும் காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 01.50க்கும் தொடருந்து புறப்படும்.

பயணிக்கும் தினங்கள், ஜனவரி 10,13,14,15,17,20,24,27,31 – 2025 பெப்ரவரி 03,04 ஆகும்.

எதிர்வரும் விடுமுறைக்காக விசேட தொடருந்து சேவை ஆரம்பம்  தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இந்த சிறப்பு ரயில் சேவை நடவடிக்கை இலங்கை ரயில் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட தொடருந்து சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.முதலாவது விசேட தொடருந்து, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும், இந்த தொடருந்து கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 07.40க்கு புறப்படும்.இந்த தொடருந்து 2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31 மற்றும் பெப்ரவரி 02, 04 ஆகிய தினங்களில் இயங்கும்.இரண்டாவது விசேட தொடருந்து, பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும், இந்த தொடருந்து பதுளையில் இருந்து இரவு 07.40க்கு புறப்படும்.இந்த தொடருந்து 2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31, மற்றும் 2025 பெப்ரவரி 02, 04 ஆகிய தினங்களில் இயங்கும்.இதை தவிர்த்து கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு இடையிலான விசேட தொடருந்து சேவையில், கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 05.30 மணிக்கும் காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 01.50க்கும் தொடருந்து புறப்படும்.பயணிக்கும் தினங்கள், ஜனவரி 10,13,14,15,17,20,24,27,31 – 2025 பெப்ரவரி 03,04 ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement