• Nov 26 2024

இன்று முதல் வடக்கு மற்றும் பிரதான தொடருந்து மார்க்கங்களில் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுப்பு..!

Tamil nila / Mar 8th 2024, 6:08 am
image

எதிர்வரும் நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு வடக்கு மற்றும் பிரதான தொடருந்து மார்க்கங்களில் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று காலை 7.30க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பதுளைக்கான விசேட தொடருந்து ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளது.

அதேநேரம், இன்று மற்றும் 10ஆம் திகதிகளில் இரவு 7.30க்கு மற்றுமொரு விசேட தொடருந்து சேவையும் கோட்டையில் இருந்து பதுளை நோக்கி இடம்பெறவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கி காலை 7.45க்கு விசேட தொடருந்து ஒன்று புறப்படவுள்ளது.

இன்று, மற்றும் எதிர்வரும் 10ஆம் திகதிகளில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கி மாலை 5.20க்கு புறப்படவுள்ளது.

இதேவேளை, நீண்ட வார இறுதியில் அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை தொடருந்து நிலையங்களுக்கு இடையே வடக்குப் பாதையில் பல தொடருந்து சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, விசேட தொடருந்து சேவை மார்ச் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அனுராதபுரத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் காலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், காங்கேசன்துறைக்கும், அனுராதபுரத்திற்கும் இடையில் மாலை 4.30க்கு இயக்கப்பட உள்ளது.

இன்று முதல் வடக்கு மற்றும் பிரதான தொடருந்து மார்க்கங்களில் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுப்பு. எதிர்வரும் நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு வடக்கு மற்றும் பிரதான தொடருந்து மார்க்கங்களில் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.இதற்கமைய, இன்று காலை 7.30க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பதுளைக்கான விசேட தொடருந்து ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளது.அதேநேரம், இன்று மற்றும் 10ஆம் திகதிகளில் இரவு 7.30க்கு மற்றுமொரு விசேட தொடருந்து சேவையும் கோட்டையில் இருந்து பதுளை நோக்கி இடம்பெறவுள்ளது.அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கி காலை 7.45க்கு விசேட தொடருந்து ஒன்று புறப்படவுள்ளது.இன்று, மற்றும் எதிர்வரும் 10ஆம் திகதிகளில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கி மாலை 5.20க்கு புறப்படவுள்ளது.இதேவேளை, நீண்ட வார இறுதியில் அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை தொடருந்து நிலையங்களுக்கு இடையே வடக்குப் பாதையில் பல தொடருந்து சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, விசேட தொடருந்து சேவை மார்ச் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அனுராதபுரத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் காலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், காங்கேசன்துறைக்கும், அனுராதபுரத்திற்கும் இடையில் மாலை 4.30க்கு இயக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement