தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி தொடருந்து திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அறிவுறுத்தலின்படி, இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் 21 ஆம் திகதி வரை ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, புத்தாண்டு காலத்தில் கண்டி, புத்தளம், தம்புள்ளை மற்றும் காலி உள்ளிட்ட 05 முக்கிய வழிகளை மையமாகக்கொண்டு நீண்டதூர பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், வழமையான தொடருந்து சேவைகளுக்கு மேலதிகமாக, கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பதுளை, கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களிலிருந்து சுமார் 8 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு தூர செல்லும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி தொடருந்து திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அறிவுறுத்தலின்படி, இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் 21 ஆம் திகதி வரை ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, புத்தாண்டு காலத்தில் கண்டி, புத்தளம், தம்புள்ளை மற்றும் காலி உள்ளிட்ட 05 முக்கிய வழிகளை மையமாகக்கொண்டு நீண்டதூர பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன், வழமையான தொடருந்து சேவைகளுக்கு மேலதிகமாக, கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பதுளை, கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களிலிருந்து சுமார் 8 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.