மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை இன்று(08) அதிகாலை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரசேத்தில் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று அதிகாலையில் பொலிஸார் குறித்த பகுதியில் வீதியில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த 3 பேரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர் கைது: நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் மீட்பு. மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை இன்று(08) அதிகாலை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பிரசேத்தில் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று அதிகாலையில் பொலிஸார் குறித்த பகுதியில் வீதியில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த 3 பேரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.