• Apr 13 2025

அம்பாறையில் மின் ஒழுக்கினால் தீப்பற்றிய வீடு: எரிந்து நாசமான சொத்துக்கள்..!

Sharmi / Apr 8th 2025, 10:07 am
image

அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம்(7) மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இவ்வாறு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து அபாய உதவி கோரினர்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்கள் உரிய இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு வருகை தந்த இலங்கை மின்சார சபையினர் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சீர் செய்தமை குறிப்பிடத்தக்கது.



அம்பாறையில் மின் ஒழுக்கினால் தீப்பற்றிய வீடு: எரிந்து நாசமான சொத்துக்கள். அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம்(7) மாலை தீ விபத்து ஏற்பட்டது.இவ்வாறு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து அபாய உதவி கோரினர்.இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இதேவேளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்கள் உரிய இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.இதனையடுத்து, அங்கு வருகை தந்த இலங்கை மின்சார சபையினர் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சீர் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement