• Feb 12 2025

மன்னாரில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா

Thansita / Feb 11th 2025, 10:21 pm
image


சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இன்று  மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மன்னார் உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் பயஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  எம்.சிறிஸ்கந்த குமார் கலந்து கொண்டார்.

மேலும் கௌரவ விருந்தினர்களாக முசலி உதவி பிரதேச செயலாளர் உள்ளடங்களாக அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது ஆண்,பெண் இரு பாலருக்கும் பல்வேறு போட்டிகள் இடம் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இன்று  மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.மன்னார் உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் பயஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  எம்.சிறிஸ்கந்த குமார் கலந்து கொண்டார்.மேலும் கௌரவ விருந்தினர்களாக முசலி உதவி பிரதேச செயலாளர் உள்ளடங்களாக அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.இதன் போது ஆண்,பெண் இரு பாலருக்கும் பல்வேறு போட்டிகள் இடம் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement