• Nov 26 2024

கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியின் அழைப்பைஏற்றது தமிழ்க் கூட்டமைப்பு- சம்பந்தன் பங்கேற்பார் என சிறீதரன் தெரிவிப்பு..!samugammedia

mathuri / Mar 11th 2024, 6:15 am
image

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தக் கலந்தரையாடலுக்காக எதிர்க்கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளன.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கத்  தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியின் அழைப்பைஏற்றது தமிழ்க் கூட்டமைப்பு- சம்பந்தன் பங்கேற்பார் என சிறீதரன் தெரிவிப்பு.samugammedia சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்தக் கலந்தரையாடலுக்காக எதிர்க்கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளன.எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கத்  தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement