• Nov 25 2024

இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையில் முறுகல் - விசாணைகள் தீவிரம்

Chithra / Oct 15th 2024, 9:39 am
image

 

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி பிரதான விமானிக்கும் துணை விமானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனன.

அதற்கமைய சிவில் போக்குவரத்து விதிகளின்படி விசாணைகள் இடம்பெறுவதுடன் பிரதான விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எயார்பஸ்-330 ரக UL 607 விமானம் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது விமானிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கழிப்பறை இடைவேளை தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை விமானி அறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டது.


இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையில் முறுகல் - விசாணைகள் தீவிரம்  அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.கடந்த மாதம் 21ஆம் திகதி பிரதான விமானிக்கும் துணை விமானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனன.அதற்கமைய சிவில் போக்குவரத்து விதிகளின்படி விசாணைகள் இடம்பெறுவதுடன் பிரதான விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.எயார்பஸ்-330 ரக UL 607 விமானம் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது விமானிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.கழிப்பறை இடைவேளை தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை விமானி அறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement