இலங்கையின் பொருளாதாரமானது ஒரு நிலையான தன்மையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குரிய இலங்கைக்கான அபிவிருத்தி அறிக்கையை வெளியிடும் போதே இந்த தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் பொருளாதாரம் தற்போது குறிப்பிடத்தக்க மாறுபாடுகளைக் காட்டி வருகிறது என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நாட்டில் வறுமையின் அபாயம் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பொருளாதாரம் ஒரு நிலையான தன்மையைப் பெற்றிருந்தாலும், நாட்டில் வறுமை அல்லது வங்குரோத்து நிலை அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படலாம் - உலக வங்கி எச்சரிக்கை இலங்கையின் பொருளாதாரமானது ஒரு நிலையான தன்மையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குரிய இலங்கைக்கான அபிவிருத்தி அறிக்கையை வெளியிடும் போதே இந்த தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் பொருளாதாரம் தற்போது குறிப்பிடத்தக்க மாறுபாடுகளைக் காட்டி வருகிறது என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாட்டில் வறுமையின் அபாயம் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பொருளாதாரம் ஒரு நிலையான தன்மையைப் பெற்றிருந்தாலும், நாட்டில் வறுமை அல்லது வங்குரோத்து நிலை அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது .