• Nov 22 2024

மோசடிகளில் ஈடுபடும் கும்பல் - மக்களுக்கு இலங்கை சுங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Sep 25th 2024, 11:31 am
image

 

உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அந்த நேர்காணலுக்கான செயலமர்வு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என அதன் பேச்சாளரான மேலதிக சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இலங்கை சுங்கத்தில் புதிய உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றது.

அந்த போட்டித் தேர்வு முடிவுகளின்படி ஒரு குழுவை நேர்காணலுக்கு வருமாறு அழைத்துள்ளோம்.

இந்த நேர்காணல் இம்மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சுங்க அதிகாரிகள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணலுக்குத் தயாராகும் வகையில், சிலர் ஒத்திகைப் செயலமர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதை சமூக வலைதளங்களில் சமீபத்தில் பார்த்தோம்.

இது ஒரு பணம் பறிக்கும் கும்பலாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டோம்.

இந்த நேர்காணலில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்குவோம்.

கல்வித் தகுதியை சரிபார்க்கவும், உடல் தகுதியை சரிபார்க்கவும் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இது தவிர, எந்த ஒரு விடயத்திற்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை.

நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒத்திகைப் செயலமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்றார்.


மோசடிகளில் ஈடுபடும் கும்பல் - மக்களுக்கு இலங்கை சுங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை  உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.அந்த நேர்காணலுக்கான செயலமர்வு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என அதன் பேச்சாளரான மேலதிக சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.இலங்கை சுங்கத்தில் புதிய உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றது.அந்த போட்டித் தேர்வு முடிவுகளின்படி ஒரு குழுவை நேர்காணலுக்கு வருமாறு அழைத்துள்ளோம்.இந்த நேர்காணல் இம்மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், சுங்க அதிகாரிகள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணலுக்குத் தயாராகும் வகையில், சிலர் ஒத்திகைப் செயலமர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதை சமூக வலைதளங்களில் சமீபத்தில் பார்த்தோம்.இது ஒரு பணம் பறிக்கும் கும்பலாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டோம்.இந்த நேர்காணலில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்குவோம்.கல்வித் தகுதியை சரிபார்க்கவும், உடல் தகுதியை சரிபார்க்கவும் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.இது தவிர, எந்த ஒரு விடயத்திற்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை.நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒத்திகைப் செயலமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்றார்.

Advertisement

Advertisement

Advertisement