ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் இலங்கை, ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு 2025ஆம் ஆண்டு முதல் மூன்று வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெற்ற தேர்தலில், இலங்கை அங்கம் வகிக்கும் 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று,
பிராந்தியத்திலிருந்து 2வது அதிகூடிய வாக்கு எண்ணிக்கையையும், ஒட்டுமொத்தமாக 7வது அதிக வாக்கு எண்ணிக்கையையும் பெற்றுள்ளது.
இலங்கை இதற்கு முன்னர் 1985 - 1989 மற்றும் 2006 - 2008 வரை இந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சு மற்றும் அதன் வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் தலைமையிலான இலங்கையின் இராஜதந்திர ஈடுபாட்டிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தெரிவாகியுள்ள இலங்கை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் இலங்கை, ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு 2025ஆம் ஆண்டு முதல் மூன்று வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.நியூயோர்க்கில் நடைபெற்ற தேர்தலில், இலங்கை அங்கம் வகிக்கும் 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, பிராந்தியத்திலிருந்து 2வது அதிகூடிய வாக்கு எண்ணிக்கையையும், ஒட்டுமொத்தமாக 7வது அதிக வாக்கு எண்ணிக்கையையும் பெற்றுள்ளது. இலங்கை இதற்கு முன்னர் 1985 - 1989 மற்றும் 2006 - 2008 வரை இந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.இந்நிலையில், வெளிவிவகார அமைச்சு மற்றும் அதன் வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் தலைமையிலான இலங்கையின் இராஜதந்திர ஈடுபாட்டிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.