ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி வேட்பாளராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் இன்று(1) கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விஜயதாச ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளதாகவும், அந்த பதவிக்கு மீண்டும் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி வேட்பாளராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் அமைச்சர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் இன்று(1) கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.விஜயதாச ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.தாம் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளதாகவும், அந்த பதவிக்கு மீண்டும் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.