• Nov 26 2024

இலங்கையில் பச்சை மிளகாய் விலை கிடுகிடு உயர்வு...!அதிர்ச்சியில் மக்கள்...!samugammedia

Sharmi / Dec 29th 2023, 2:17 pm
image

ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை  சில்லறை சந்தையில் இதன் விலை சுமார் 1,800 ரூபாய் என கூறப்படுகிறது.

அதன்படி, பச்சை மிளகாய் காய் ஒன்றின் விலை சுமார் 15 ரூபாவாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

பேலியகொட மானிங் மாலில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 2,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் விலை 1,650 முதல் 1,670 ரூபா வரை பதிவாகியுள்ளது.

கேப்பிட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 முதல் 1300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மிளகாய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதுடன் அரசாங்கம் இதில் தலையிட்டு மரக்கறிகளுக்கான நிர்ணய விலைகளை வெளியிடுமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் பச்சை மிளகாய் விலை கிடுகிடு உயர்வு.அதிர்ச்சியில் மக்கள்.samugammedia ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை  சில்லறை சந்தையில் இதன் விலை சுமார் 1,800 ரூபாய் என கூறப்படுகிறது.அதன்படி, பச்சை மிளகாய் காய் ஒன்றின் விலை சுமார் 15 ரூபாவாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.பேலியகொட மானிங் மாலில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 2,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் விலை 1,650 முதல் 1,670 ரூபா வரை பதிவாகியுள்ளது.கேப்பிட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 முதல் 1300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மிளகாய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதுடன் அரசாங்கம் இதில் தலையிட்டு மரக்கறிகளுக்கான நிர்ணய விலைகளை வெளியிடுமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement