• Jun 26 2024

நெதர்லாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை

Tharun / Jun 17th 2024, 8:35 pm
image

Advertisement

செயின்ட் லூசிய நகரில்  நடந்த ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  நெதர்லாந்தை எதிர்த்து விளையாடிய இலங்கை  38  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில்  வென்ற நெதர்லாந்து  இலங்கையிஅத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

முதலில் பந்து வீசியது.   முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை   20 ஓவர்களில்  6 விக்கெற்களை இழந்து 201  ஓட்டங்கள் எடுத்தது  அதிகபட்சமாக‌அசலங்கா 46, குசால் மெண்டிஸ் 46 ஓட்டங்கள் எடுத்தனர்.   

202 ஓட்டங்களை துரத்திய நெதர்லாந்து  16.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 118  ஓட்டங்கள் எடுத்தது.    அதிகபட்சமாக கப்டன் ஸ்காட்எட்வர்ட்ஸ் 31, மைக்கேல் லேவிட் 31 ஓட்டங்கள் எடுத்தனர். இலங்கை சார்பில்  நுவான் துசாரா 3, கப்டன் ஹசரங்கா 2, மதீஸா பதிரனா 2 விக்கெட்டுகளை  வீழ்த்தினர்.  83 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  இலங்கை வெற்றி பெற்றது.

ரி20 உலகக்  கிண்ண  வரலாற்றில் ஒரு போட்டியில் அரை சதம் அடிக்காமலேயே அதிகபட்ச  ஓட்டங்கள் அடித்த பதிவு செய்த அணி என்ற வினோதமான உலக சாதனையை இலங்கை சமன் செய்தது. -

இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவும் அரை சதம் கூட அடிக்காமல்   7 விக்கெற்களை  இழந்து 201  ஓட்டங்கள் எடுத்தது.


நெதர்லாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை செயின்ட் லூசிய நகரில்  நடந்த ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  நெதர்லாந்தை எதிர்த்து விளையாடிய இலங்கை  38  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில்  வென்ற நெதர்லாந்து  இலங்கையிஅத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.முதலில் பந்து வீசியது.   முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை   20 ஓவர்களில்  6 விக்கெற்களை இழந்து 201  ஓட்டங்கள் எடுத்தது  அதிகபட்சமாக‌அசலங்கா 46, குசால் மெண்டிஸ் 46 ஓட்டங்கள் எடுத்தனர்.   202 ஓட்டங்களை துரத்திய நெதர்லாந்து  16.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 118  ஓட்டங்கள் எடுத்தது.    அதிகபட்சமாக கப்டன் ஸ்காட்எட்வர்ட்ஸ் 31, மைக்கேல் லேவிட் 31 ஓட்டங்கள் எடுத்தனர். இலங்கை சார்பில்  நுவான் துசாரா 3, கப்டன் ஹசரங்கா 2, மதீஸா பதிரனா 2 விக்கெட்டுகளை  வீழ்த்தினர்.  83 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  இலங்கை வெற்றி பெற்றது.ரி20 உலகக்  கிண்ண  வரலாற்றில் ஒரு போட்டியில் அரை சதம் அடிக்காமலேயே அதிகபட்ச  ஓட்டங்கள் அடித்த பதிவு செய்த அணி என்ற வினோதமான உலக சாதனையை இலங்கை சமன் செய்தது. -இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவும் அரை சதம் கூட அடிக்காமல்   7 விக்கெற்களை  இழந்து 201  ஓட்டங்கள் எடுத்தது.

Advertisement

Advertisement

Advertisement