• Sep 19 2024

2050க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான ஆற்றல் இலங்கைக்கு உண்டு! - ரணில்

Chithra / Feb 7th 2023, 10:18 am
image

Advertisement

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பசுமைப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஆற்றல் இலங்கைக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2050 க்குள் பசுமைப் பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதிசெய்ய இயற்கை தழுவல் திட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டத்தை தயாரித்துள்ளது என கூறியுள்ளார்.

பசுமை வளர்ச்சிப் பாதைக்கு இலங்கையின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த நிகழ்வில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய காலநிலை மாற்றச் சட்டம் உருவாக்கப்படும் அதே வேளையில், புதிய சுற்றுச்சூழல் சட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹார்டன் சமவெளி, சிங்கராஜா காடு, மஹாவலி ஆறு மற்றும் ராமர் பாலம் என்பன அடையாளப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2050க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான ஆற்றல் இலங்கைக்கு உண்டு - ரணில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பசுமைப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஆற்றல் இலங்கைக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.2050 க்குள் பசுமைப் பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதிசெய்ய இயற்கை தழுவல் திட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டத்தை தயாரித்துள்ளது என கூறியுள்ளார்.பசுமை வளர்ச்சிப் பாதைக்கு இலங்கையின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த நிகழ்வில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.புதிய காலநிலை மாற்றச் சட்டம் உருவாக்கப்படும் அதே வேளையில், புதிய சுற்றுச்சூழல் சட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இதன் மூலம் நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹார்டன் சமவெளி, சிங்கராஜா காடு, மஹாவலி ஆறு மற்றும் ராமர் பாலம் என்பன அடையாளப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement