• Jun 29 2024

இலங்கையில் ஜூலை மாதம் முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள பொலிஸார்..!

Chithra / Jun 26th 2024, 12:11 pm
image

Advertisement

 

பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இரண்டு மாத கால விசேட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் விடுத்துள்ள பணிப்புரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு ஆயுதப் படைகளின் துப்பாக்கிகள் பாரிய தடையாக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸாரின் உதவியுடன் இந்த விசேட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதி நடவடிக்கையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜூலை மாதம் முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள பொலிஸார்.  பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இரண்டு மாத கால விசேட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் விடுத்துள்ள பணிப்புரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு ஆயுதப் படைகளின் துப்பாக்கிகள் பாரிய தடையாக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், பொலிஸாரின் உதவியுடன் இந்த விசேட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளனர்.எவ்வாறாயினும், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதி நடவடிக்கையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement