• Nov 28 2024

ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை கடுமையாக நிராகரித்துள்ள இலங்கை!

Chithra / Oct 8th 2024, 12:09 pm
image

 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தை இலங்கை கடுமையாக நிராகரித்துள்ளதுடன், பொறிமுறையின் அதிகாரங்களை நீட்டிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் உடன்படாததற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

இன்று அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், வெளி சாட்சிய சேகரிப்பு பொறிமுறையின் அதிகாரத்தை நீட்டிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் இலங்கை இணங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை 09-09-2024 முதல் 11-10-2024 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை கடுமையாக நிராகரித்துள்ள இலங்கை  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தை இலங்கை கடுமையாக நிராகரித்துள்ளதுடன், பொறிமுறையின் அதிகாரங்களை நீட்டிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் உடன்படாததற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுஇன்று அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், வெளி சாட்சிய சேகரிப்பு பொறிமுறையின் அதிகாரத்தை நீட்டிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் இலங்கை இணங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்இதேவேளை 09-09-2024 முதல் 11-10-2024 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement