• Mar 06 2026

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா கைது!

shanu / Feb 8th 2026, 9:43 pm
image

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.


போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.


பேலியகொடைப் பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 4 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.


இந்தப் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில், கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா கைது ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியகொடைப் பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 4 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.இந்தப் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement