• Sep 20 2024

இலங்கையில் இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம் - வைத்திய நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Aug 21st 2023, 7:43 am
image

Advertisement

இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வயதினருக்கு படிப்படியாக மாரடைப்பு ஏற்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாரடைப்பு காரணமாக சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே இறந்து விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் 10 முதல் 15 மாரடைப்பு நோயாளிகள் செல்கின்றனர். இவர்களில் 90 வீதமானோர் ஆண்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையான உணவுப் பழக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை, மன உளைச்சல் போன்றவற்றால் மாரடைப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம் - வைத்திய நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல் samugammedia இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வயதினருக்கு படிப்படியாக மாரடைப்பு ஏற்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மாரடைப்பு காரணமாக சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே இறந்து விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சில மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் 10 முதல் 15 மாரடைப்பு நோயாளிகள் செல்கின்றனர். இவர்களில் 90 வீதமானோர் ஆண்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.முறையான உணவுப் பழக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை, மன உளைச்சல் போன்றவற்றால் மாரடைப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement