• May 19 2024

பாராளுமன்றத்திற்குள் பாலியல் துஷ்பிரயோகம் - பெண்களின் ஆடை விதிகளில் மாற்றம்! samugammedia

Chithra / Aug 21st 2023, 7:33 am
image

Advertisement

 பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துறையின் பெண் ஊழியர்கள் சிலருக்கு மூத்த அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில்  இவ்விடயம் வெளியானதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதனையடுத்து பணிப்பெண்கள் பாராளுமன்றத்திற்கு வரும் போதும் வெளியேறும் போதும் புடவை அணிந்து வருமாறு வீட்டு பராமரிப்பு திணைக்கள தலைவர்கள் உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், பல்வேறு சலுகைகளைப் பெறும் சில பணிப்பெண்கள் மாத்திரம் சேலை ஒழுங்கை மீறுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பாராளுமன்றத்திற்குள் பாலியல் துஷ்பிரயோகம் - பெண்களின் ஆடை விதிகளில் மாற்றம் samugammedia  பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த துறையின் பெண் ஊழியர்கள் சிலருக்கு மூத்த அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில்  இவ்விடயம் வெளியானதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.அதனையடுத்து பணிப்பெண்கள் பாராளுமன்றத்திற்கு வரும் போதும் வெளியேறும் போதும் புடவை அணிந்து வருமாறு வீட்டு பராமரிப்பு திணைக்கள தலைவர்கள் உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும், பல்வேறு சலுகைகளைப் பெறும் சில பணிப்பெண்கள் மாத்திரம் சேலை ஒழுங்கை மீறுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Advertisement

Advertisement

Advertisement