• Sep 17 2024

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக தலைமன்னார் தேவாலயத்தில் விசேட திருப்பலி...!

Sharmi / May 18th 2024, 3:52 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் தின 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இரங்கல் திருப்பலி தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று(18) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, இறந்த உறவுகளுக்காக மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.

இரங்கல் திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது தென் பகுதியில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு சுற்றுலா வந்த சிங்கள மக்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தெளிவுபடுத்தபட்ட நிலையில் அவர்களும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை பெற்றுக்கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரங்கல் திருப்பலி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வை ஆலய அருட்பணி பேரவை,மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக தலைமன்னார் தேவாலயத்தில் விசேட திருப்பலி. முள்ளிவாய்க்கால் தின 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இரங்கல் திருப்பலி தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று(18) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, இறந்த உறவுகளுக்காக மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.இரங்கல் திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதன் போது தென் பகுதியில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு சுற்றுலா வந்த சிங்கள மக்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தெளிவுபடுத்தபட்ட நிலையில் அவர்களும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை பெற்றுக்கொண்டனர்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரங்கல் திருப்பலி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வை ஆலய அருட்பணி பேரவை,மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement