• Jun 17 2024

இலங்கையிலிருந்து 43 பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Chithra / May 26th 2024, 10:42 am
image

Advertisement

  

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 பாகிஸ்தான் கைதிகளை திருப்பி அனுப்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திர ஸ்ரீவிஜய் குணரத்ன மற்றும் உள்நாட்டு அமைச்சர் மொஹ்சின் நக்விக்கும் இடையில் பாகிஸ்தானில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு உறவுகளின் மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டன.

43 கைதிகளை பாகிஸ்தானுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் கடந்த ஒரு மாதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு ஆதரவளித்த இராஜதந்திரிக்கு உள்விவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து 43 பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்   இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 பாகிஸ்தான் கைதிகளை திருப்பி அனுப்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திர ஸ்ரீவிஜய் குணரத்ன மற்றும் உள்நாட்டு அமைச்சர் மொஹ்சின் நக்விக்கும் இடையில் பாகிஸ்தானில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சந்திப்பில் பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு உறவுகளின் மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டன.43 கைதிகளை பாகிஸ்தானுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் கடந்த ஒரு மாதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு ஆதரவளித்த இராஜதந்திரிக்கு உள்விவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement