• Nov 28 2024

இலங்கை ஜோர்டான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Tamil nila / Jul 15th 2024, 7:34 pm
image

இலங்கை மற்றும் ஜோர்டான் அரசாங்கங்கள் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளன.

அந்த நாட்டில் உள்ள  இலங்கை தூதரகத்தின் தகவல் படி, ஜோர்தானில் உள்ள இலங்கை தூதுவர் JADS பிரியங்கிகா விஜேகுணசேகர மற்றும் ஜோர்டானின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகம் மஜேத் தாலிஜி அல்கதர்னே  ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதன் மூலம் ஜோர்டானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதுடன், மக்களிடையே அதிகளவான தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என செயலாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும், பொதுவான நலன்களின் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும் என இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜோர்டான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை மற்றும் ஜோர்டான் அரசாங்கங்கள் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளன.அந்த நாட்டில் உள்ள  இலங்கை தூதரகத்தின் தகவல் படி, ஜோர்தானில் உள்ள இலங்கை தூதுவர் JADS பிரியங்கிகா விஜேகுணசேகர மற்றும் ஜோர்டானின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகம் மஜேத் தாலிஜி அல்கதர்னே  ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதன் மூலம் ஜோர்டானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதுடன், மக்களிடையே அதிகளவான தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என செயலாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும், பொதுவான நலன்களின் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும் என இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement