• Oct 19 2024

போலந்து வழியாக உக்ரேனுக்கு ஆயுதங்களை விற்க இலங்கை முயற்சி? பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பது என்ன?

Chithra / May 31st 2024, 1:41 pm
image

Advertisement


 

இலங்கையில் மேலதிகமாக உள்ள வெடிமருந்துகளை உக்ரைனிற்கு விற்பனை செய்வதற்கு போலந்து இடைத்தரகர்களை பயன்படுத்துகின்றது என வெளியாகியுள்ள தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

இவ்வாறான தகவல்களில் எந்த உண்மையிலும் இல்லை ஆதாரங்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் காலவதியான வெடிமருந்துகள் இராணுவத்தின் முகாம்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் இந்த வெடிமருந்துகள் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமானவை இல்லை.

தனியாருக்கு சொந்தமானவை என தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இவற்றை அகற்றுமாறு அந்த நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


போலந்து வழியாக உக்ரேனுக்கு ஆயுதங்களை விற்க இலங்கை முயற்சி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பது என்ன  இலங்கையில் மேலதிகமாக உள்ள வெடிமருந்துகளை உக்ரைனிற்கு விற்பனை செய்வதற்கு போலந்து இடைத்தரகர்களை பயன்படுத்துகின்றது என வெளியாகியுள்ள தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.இவ்வாறான தகவல்களில் எந்த உண்மையிலும் இல்லை ஆதாரங்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.எனினும் காலவதியான வெடிமருந்துகள் இராணுவத்தின் முகாம்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.எனினும் இந்த வெடிமருந்துகள் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமானவை இல்லை.தனியாருக்கு சொந்தமானவை என தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இவற்றை அகற்றுமாறு அந்த நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement