• Jan 22 2025

காஸா போர் நிறுத்தத்தை வரவேற்ற இலங்கை..!

Chithra / Jan 20th 2025, 10:44 am
image

 

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஸாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது.

இது குறித்த அறிக்கையில் வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளதாவது,

பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காஸாவில் அவர்கள் வசிக்கும் இடங்களுக்குத் திரும்புவதற்கும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் வழி வகுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் நிலைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த முன்னேற்றங்கள் பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஸ்தாபிப்பதற்கு பங்களிக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

காஸா போர் நிறுத்தத்தை வரவேற்ற இலங்கை.  இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஸாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது.இது குறித்த அறிக்கையில் வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளதாவது,பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காஸாவில் அவர்கள் வசிக்கும் இடங்களுக்குத் திரும்புவதற்கும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் வழி வகுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் நிலைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.இந்த முன்னேற்றங்கள் பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஸ்தாபிப்பதற்கு பங்களிக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement