• Apr 30 2025

தவறி விழுந்த பயணி ,நடு ரோட்டில் விட்டுச்சென்ற அரச பேருந்து

Thansita / Apr 29th 2025, 9:56 pm
image

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாக கீழே விழுந்த பின் அந்த நபரையும் கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேருந்து ஒன்று சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது 

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்

குறித்த பேருந்தில் இரு நண்பர்கள் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணம் செய்தனர். இரு நண்பர்களில் ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேறு காரணத்தாலோ கீழே விழுந்துள்ளார். அதனை அவதானித்த கூட வந்த நண்பர் பேருந்தை நிருத்துமாறு சத்தம் எழுப்பியுள்ளார் 

கூட வந்த நண்பரின் சத்தத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கத்தால் எழும்பியும் நடத்துனர் காதில் அந்த சத்தம் விழாததுபோல் இருந்துள்ளார் 

பின் பயணிகளின் தொந்தரவால் நடத்துனர், நண்பரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்தை நிருத்தியுள்ளார் 

சிறிது நேரத்தின் பின் விழுந்த நபரையும் அவரின் நண்பரையும் இடையிலே விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டுள்ளது 

இச் சம்பவம் தொடர்பாக கூட வந்த பயணிகள் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்லுமாறு சாரதியையும் நடத்துனரையும் கேட்ட போது அவர்கள் பயணிகளின் கருத்துக்கு இடமளிக்கவில்லை 

மேலும் குறித்த பேருந்து யாழ்ப்பாணம் கொழும்பு என அடையாளப்படுத்தி  இருந்தும் வவுனியா மட்டுமே சென்றுள்ளது இவ்வாறான குழப்பத்தால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் 

மேலும் பேருந்தின் சாரதிக்கும் நடத்துனர்க்கும் தமிழ் மொழி தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தவறி விழுந்த பயணி ,நடு ரோட்டில் விட்டுச்சென்ற அரச பேருந்து கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாக கீழே விழுந்த பின் அந்த நபரையும் கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேருந்து ஒன்று சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்குறித்த பேருந்தில் இரு நண்பர்கள் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணம் செய்தனர். இரு நண்பர்களில் ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேறு காரணத்தாலோ கீழே விழுந்துள்ளார். அதனை அவதானித்த கூட வந்த நண்பர் பேருந்தை நிருத்துமாறு சத்தம் எழுப்பியுள்ளார் கூட வந்த நண்பரின் சத்தத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கத்தால் எழும்பியும் நடத்துனர் காதில் அந்த சத்தம் விழாததுபோல் இருந்துள்ளார் பின் பயணிகளின் தொந்தரவால் நடத்துனர், நண்பரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்தை நிருத்தியுள்ளார் சிறிது நேரத்தின் பின் விழுந்த நபரையும் அவரின் நண்பரையும் இடையிலே விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக கூட வந்த பயணிகள் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்லுமாறு சாரதியையும் நடத்துனரையும் கேட்ட போது அவர்கள் பயணிகளின் கருத்துக்கு இடமளிக்கவில்லை மேலும் குறித்த பேருந்து யாழ்ப்பாணம் கொழும்பு என அடையாளப்படுத்தி  இருந்தும் வவுனியா மட்டுமே சென்றுள்ளது இவ்வாறான குழப்பத்தால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் மேலும் பேருந்தின் சாரதிக்கும் நடத்துனர்க்கும் தமிழ் மொழி தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement