• Jul 29 2025

மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு வலியுறுத்தும் பெப்ரல்

Chithra / Jul 29th 2025, 12:20 pm
image

நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும், நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தற்போதைய மாகாண சபைகளின் பதவிக்காலம் 2014 செப்டம்பர் 20, அன்று முடிவடைந்து. அன்றிலிருந்து 11 ஆண்டுகள் ஆகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்தின்படி, மாகாண சபைத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.ஆனால் பல்வேறு காரணங்களால், இது நடத்தப்படவில்லை.

பொதுமக்களிடமிருந்து பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே, தேர்தல்களை நடத்துவதில் ஏற்படும் தாமதம் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே கவலைகளை எழுப்பியுள்ளது என்றும் பெப்ரல் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

மாகாண சபைச் சட்டம் அல்லது மாகாண சபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டால், அது செயல்முறையை மேலும் தாமதப்படுத்தும். 

இருப்பினும், தேர்தலை மேலும் தாமதமின்றி நடத்துவதற்கான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்று பெப்ரல் சுட்டிக்காட்டியுள்ளது. 

மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு வலியுறுத்தும் பெப்ரல் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும், நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய மாகாண சபைகளின் பதவிக்காலம் 2014 செப்டம்பர் 20, அன்று முடிவடைந்து. அன்றிலிருந்து 11 ஆண்டுகள் ஆகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளது.சட்டத்தின்படி, மாகாண சபைத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.ஆனால் பல்வேறு காரணங்களால், இது நடத்தப்படவில்லை.பொதுமக்களிடமிருந்து பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.எனவே, தேர்தல்களை நடத்துவதில் ஏற்படும் தாமதம் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே கவலைகளை எழுப்பியுள்ளது என்றும் பெப்ரல் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.மாகாண சபைச் சட்டம் அல்லது மாகாண சபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டால், அது செயல்முறையை மேலும் தாமதப்படுத்தும். இருப்பினும், தேர்தலை மேலும் தாமதமின்றி நடத்துவதற்கான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்று பெப்ரல் சுட்டிக்காட்டியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement