யாழ்ப்பாணம் - பருத்துறை வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியதில் கோர விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் நல்லூரானின் கொடியேற்ற நாளான இன்று பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை வீதி வழியாக பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் அவ்வழியே வந்த சிறிய ரக கார் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் பேருந்து சாரதிக்கும் கார் சாரதிக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்திற்குள்ளான பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த வீதியிலிருந்த வர்த்தக கடையொன்றுக்குள் புகுந்துள்ளது.
விபத்திற்குள்ளான இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளது. அதிலும் காரின் முன்புறம் பலத்த சேதமடைந்துள்ளது.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் இன்று கொடியேறிய நிலையில் நல்லூரிற்குச் செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் பருத்தித்துறை வீதியாலேயே அதிக மக்கள் பயணித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்- பருத்தித்துறை வீதி கோப்பாயில் கோர விபத்து; நல்லூர் தினத்தில் நடந்த சோகம் யாழ்ப்பாணம் - பருத்துறை வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியதில் கோர விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் நல்லூரானின் கொடியேற்ற நாளான இன்று பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வீதி வழியாக பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் அவ்வழியே வந்த சிறிய ரக கார் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில் பேருந்து சாரதிக்கும் கார் சாரதிக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்குள்ளான பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த வீதியிலிருந்த வர்த்தக கடையொன்றுக்குள் புகுந்துள்ளது. விபத்திற்குள்ளான இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளது. அதிலும் காரின் முன்புறம் பலத்த சேதமடைந்துள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் இன்று கொடியேறிய நிலையில் நல்லூரிற்குச் செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பருத்தித்துறை வீதியாலேயே அதிக மக்கள் பயணித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர். விபத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.