• Jul 30 2025

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

Chithra / Jul 29th 2025, 3:22 pm
image


இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா அக்வாரிஸ்" (Southern Delta Aquarius) விண்கல் பொழிவை இன்றிரவு காணலாம் என்று வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். 

இந்த விண்கல் பொழிவுக்கு "சதன் டெல்டா அக்வாரிஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. 

கும்ப நட்சத்திர தொகுதிக்கு அருகில் இருப்பதால் அவ்வாறு அழைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விண்கல் பொழிவு கிழக்கு திசையிலிருந்து இரவு 9.00 மணியளவில் எழும் என்று கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். 

அதன்படி, இன்று இரவு 9.00 மணிக்குப் பிறகு எந்த நேரத்திலும் விண்கல் பொழிவைக் காணலாம். 

இரவு 9.00 மணி முதல் காலை வரை அது வானத்தில் உச்சம் பெற்று பின்னர் மேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த காட்சியுடன், சனி கிரகமும் வானத்தின் அதே பகுதியில் தெரியும் என தெரிவித்துள்ளார்.

விண்கல் பொழிவின் போது 15 முதல் 25 விண்கற்களை அவதானிக்க முடியும் என கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா அக்வாரிஸ்" (Southern Delta Aquarius) விண்கல் பொழிவை இன்றிரவு காணலாம் என்று வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த விண்கல் பொழிவுக்கு "சதன் டெல்டா அக்வாரிஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. கும்ப நட்சத்திர தொகுதிக்கு அருகில் இருப்பதால் அவ்வாறு அழைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விண்கல் பொழிவு கிழக்கு திசையிலிருந்து இரவு 9.00 மணியளவில் எழும் என்று கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று இரவு 9.00 மணிக்குப் பிறகு எந்த நேரத்திலும் விண்கல் பொழிவைக் காணலாம். இரவு 9.00 மணி முதல் காலை வரை அது வானத்தில் உச்சம் பெற்று பின்னர் மேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காட்சியுடன், சனி கிரகமும் வானத்தின் அதே பகுதியில் தெரியும் என தெரிவித்துள்ளார்.விண்கல் பொழிவின் போது 15 முதல் 25 விண்கற்களை அவதானிக்க முடியும் என கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement