• Jul 29 2025

கந்தளாயில் விசேட வாகன சோதனை; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

Chithra / Jul 29th 2025, 12:17 pm
image

"க்ளின் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ், கந்தளாய் பொலிஸாரினால் இன்று (29)  கந்தளாய் நகரின் முக்கிய வீதிகளில் விசேட வாகனச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்த நடவடிக்கையில், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பல்வேறு வாகனங்கள்  வழிமறிக்கப்பட்டு, உரிய ஆவணங்கள், வாகன அனுமதிப்பத்திரங்கள்  மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரிபார்க்கப்பட்டன.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், பின் அமர்ந்தவர்களும் தலைக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதும் தெளிவாக சோதிக்கப்பட்டது. 

விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபோன்ற திடீர் சோதனைகள் எதிர்வரும் நாட்களிலும் இடம்பெறும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கந்தளாயில் விசேட வாகன சோதனை; பொலிஸார் அதிரடி நடவடிக்கை "க்ளின் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ், கந்தளாய் பொலிஸாரினால் இன்று (29)  கந்தளாய் நகரின் முக்கிய வீதிகளில் விசேட வாகனச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்த நடவடிக்கையில், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பல்வேறு வாகனங்கள்  வழிமறிக்கப்பட்டு, உரிய ஆவணங்கள், வாகன அனுமதிப்பத்திரங்கள்  மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரிபார்க்கப்பட்டன.மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், பின் அமர்ந்தவர்களும் தலைக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதும் தெளிவாக சோதிக்கப்பட்டது. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதுபோன்ற திடீர் சோதனைகள் எதிர்வரும் நாட்களிலும் இடம்பெறும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement