நியூயோர்க்கின் மத்திய மன்ஹாட்டனில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயதான சேன் தமுரா என அடையாளம் காணப்பட்ட ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
பின்னர் அவர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்ஹாட்டனின் நெரிசலான பகுதியில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால், அந்தப் பகுதியில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஒருவரும் மற்றும் நான்கு பொதுமக்கள் அடங்குவர்.
மேலும், ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கை அதிரவைத்த துப்பாக்கி சூடு; பொலிஸ் அதிகாரி உட்பட்ட பலர் பலி நியூயோர்க்கின் மத்திய மன்ஹாட்டனில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயதான சேன் தமுரா என அடையாளம் காணப்பட்ட ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். பின்னர் அவர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மன்ஹாட்டனின் நெரிசலான பகுதியில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால், அந்தப் பகுதியில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஒருவரும் மற்றும் நான்கு பொதுமக்கள் அடங்குவர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.