மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதிகள் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகிலிருந்த காணியில் இன்று காலை தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களினால் இந்த தீ வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், புகையிரத நிலைய காவலர்கள் மற்றும் மாநகர சபை முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கி வருகின்றனர்.
பெற்றோல் களஞ்சியங்கள் உள்ள காணிக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதனால் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் குறித்த பகுதியில் குவிந்துள்ளனர்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு சொந்தமான காணியில் தீ விபத்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதிகள் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகிலிருந்த காணியில் இன்று காலை தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.இனந்தெரியாத நபர்களினால் இந்த தீ வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், புகையிரத நிலைய காவலர்கள் மற்றும் மாநகர சபை முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கி வருகின்றனர்.பெற்றோல் களஞ்சியங்கள் உள்ள காணிக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதனால் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் குறித்த பகுதியில் குவிந்துள்ளனர்.