• Jul 30 2025

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் மீண்டும் மழை

Chithra / Jul 29th 2025, 4:13 pm
image


வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

தென் மாகாணத்தில் அவ்வப்போது மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் மீண்டும் மழை வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்தில் அவ்வப்போது மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement